கொரோனா தொற்று பரவ காரணமாக இருக்கும் தொழில் நிறுவனங்களுக்கு ‘சீல்’ வைக்கப்படும்; கலெக்டர் எச்சரிக்கை

கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க, தொழில் நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள், கொசுவலை உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

Update: 2020-07-11 02:26 GMT
கரூர்,

ஆலோசனை கூட்டத்திற்கு கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி, பேசுகையில், கரூர் மாவட்டத்தில் இயங்கிவரும் ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள், கொசுவலை உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் பிற தொழில் நிறுவனங்கள், ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் உள்பட அனைத்து கடைகளிலும் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க தமிழக அரசு கூறிய வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.

தொழிற்சாலைகளை கண்காணிக்க அரசு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் ஆய்வுக்கு வரும்போது, விதிமுறைகளை மீறி செயல்படுவது கண்டறியப்பட்டாலோ, அல்லது நிறுவனங்களில் கொரோனா பரவும் சூழல் இருந்தாலோ அந்நிறுவனம் பூட்டி ‘சீல்‘ வைக்கப்படும் என்றார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்