நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க வேண்டும் கவர்னர் கிரண்பெடி விருப்பம்

நாம் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.

Update: 2020-07-01 22:30 GMT
புதுச்சேரி,

நாம் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.

ஆரோக்கிய சேது செயலி

புதுவை கவர்னர் கிரண்பெடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

தனது உன்னத சேவையின் மூலம் உலகத்தின் அனைத்து மக்களின் உயிரை காக்கும் மருத்துவர்களுக்கு புதுச்சேரி மக்கள் மற்றும் கவர்னர் மாளிகை சார்பாக இந்த மருத்துவர் தினத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். அவர்களுக்கு வெறும் நன்றி செலுத்துதல் மட்டும் மிகையாகாது.

கடுமையான நிலையில் அவர்கள் தங்களது கடமையை நேரம் பார்க்காமல் செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே நன்றி கூறுதல் மட்டும் போதாது. நண்பர்களே, நாம் அவர்களுக்கு நன்றி சொல்லும் ஒரு வழி என்னவென்றால் நம் உடலை நாமே கவசம் அணிந்தும், சமூக இடைவெளி கடைப்பிடித்தும், கைகளை சுத்தம் செய்வதின் மூலமும் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்வதன் மூலமும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இது நம்மை சுற்றியுள்ளவர் யாருக்கேனும் தொற்று இருந்தால் தெரிவிக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி

நாம் மருத்துவர்களுக்கு செய்யும் மரியாதை என்னவென்றால், சுய நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்குதல், சுய சுகாதார பராமரிப்பு, முக கவசம் அணிவது, சமூக இடைவெளி, சுய சுகாதாரம் போன்றவையாகும். அவர்களுக்கு உறுதுணையாக விளங்கும் அங்கன்வாடி ஊழியர்கள், ஆஷா ஊழியர்கள் செவிலியர் கள் மற்றும் மருத்துவ துணை ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி செலுத்துவதற்கு கடமைப்பட்டுள்ளோம்.

ஒவ்வொரு தனி மருத்துவர்களுக்கும் இந்த அரசு சான்றிதழை புதுச்சேரி மக்களின் சார்பாக கவர்னர் மாளிகை வழங்குகிறது.

மேலும் செய்திகள்