கொரோனா நிவாரணமாக ரூ.12 ஆயிரம் வழங்கக்கோரி - கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கொரோனா நிவாரணமாக ரூ.12 ஆயிரம் வழங்கக்கோரி, தூத்துக்குடி மாவட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சியினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 5 இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தூத்துக்குடி வண்டிமறிச்சான் கோவில் தெருவில் துணை செயலாளர் கண்ணன் தலைமையிலும், பூபாலராயர்புரம் கருப்பட்டி சொசைட்டி அருகே மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் தனலட்சுமி தலைமையிலும், போல்டன்புரத்தில் கிளை செயலாளர் சேகர் தலைமையிலும், முத்தையாபுரம் தோப்பு தெருவில் போத்தியடியான் தலைமையிலும், காமராஜ் நகரில் 46-வது வார்டு கிளை செயலாளர் ஜீவா தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் கொரோனா கால நிவாரண நிதியாக அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் தலா ரூ.12 ஆயிரம் வழங்க வேண்டும், நலவாரிய உதவிகள் முறையாக கிடைத்திட மாவட்ட கலெக்டர் தலைமையிலான நலவாரிய ஆய்வுக்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும், மின்சார கட்டண மசோதா 2020-யை வாபஸ் பெற வேண்டும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணமும், அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல உரிய ஏற்பாடுகளும் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டங்களில் மாநகர செயலாளர் ஞானசேகர், உதவி செயலாளர் மாடசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று தூத்துக்குடி மாநகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 3 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தூத்துக்குடி மாவட்ட கட்சி அலுவலகம் முன்பு மாநகர செயலாளர் ராஜா தலைமையிலும், தபால் தந்தி காலனியில் ஜேம்ஸ் தலைமையிலும், 15-வது வார்டு பகுதியில் குமாரவேல் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் அர்ச்சுணன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல கோவில்பட்டி இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் முன்பு அக்கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் அழகுமுத்து பாண்டியன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் பரமராஜ், நகர செயலாளர் சரோஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் முத்துகுமார், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் கல்யாணசுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விளாத்திகுளம் தாலுகா அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் புவிராஜ், இந்திய கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் பிச்சை, மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு ஒன்றிய செயலாளர் சண்முக பெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
ஸ்ரீவைகுண்டம் பழைய தாலுகா அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் ராமலிங்கம், ஒன்றிய செயலாளர் நம்பிராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சாத்தான்குளம் தாலுகா அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் ஜெயபால், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.