கடையின் பூட்டை உடைத்து செல்போன் திருட முயன்ற வாலிபர் கைது

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில், கடையின் பூட்டை உடைத்து செல்போன் திருட முயன்ற வாலிபர் கைது செய்தனர்.

Update: 2020-06-07 23:36 GMT
படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் செல்போன் கடை ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் அந்த கடையின் பூட்டை உடைத்து ஒருவர் உள்ளே நுழைந்துள்ளார். அப்போது அந்த பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த ஓரகடம் போலீசார் அந்த நபரை மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். போலீஸ் விசாரணையில், அவர் செம்மஞ்சேரி பகுதியை சேர்ந்த சிவசங்கர் (வயது 21) என்பதும், ஒரகடம் பகுதியில் தங்கியிருந்து அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது.

மேலும் அவர் கடையின் பூட்டை உடைத்து செல்போன் திருட முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்