மாலத்தீவில் இருந்து தூத்துக்குடிக்கு கடற்படை கப்பலில் நாளை 700 இந்தியர்கள் வருகை கொரோனா பரிசோதனைக்கு ஏற்பாடு
மாலத்தீவில் இருந்து தூத்துக்குடிக்கு கடற்படை கப்பலில் 700 இந்தியர்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வருகின்றனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்துவதற்கு, தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி,
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவைச் சேர்ந்தவர்கள் பலர் வெளிநாடுகளில் பணியாற்றி வருகின்றனர். அதேபோன்று சுற்றுலாவுக்கும் சென்று வருகின்றனர். அவ்வாறு சுற்றுலா சென்றவர்கள், பணியாற்றும் தொழிலாளர்கள், ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கி தவித்து வருகின்றனர்.
அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்காக, மத்திய அரசு ‘வந்தே பாரத்‘ இயக்கத்தை நடத்தி வருகிறது. இதன்மூலம் பல்வேறு நாடுகளில் சிக்கி தவித்து வரும் இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். இதற்காக அந்த நாடுகளுக்கு விமானங்கள் மற்றும் கடற்படை கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
“ஆபரேசன் சமுத்திர சேது“ திட்டத்தின்கீழ் இந்திய கடற்படை கப்பல் ஐ.என்.எஸ். ஜலஸ்வா மூலம் இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். அதன்படி, கடந்த 2-ந்தேதி இலங்கையில் இருந்து 713 இந்தியர்களுடன் கடற்படை கப்பல் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வந்தது. தற்போது 2-வது கட்டமாக மாலத்தீவில் இருந்து 700 இந்தியர்கள் மீட்கப்பட்டு தூத்துக்குடிக்கு அழைத்து வரப்படுகின்றனர். இதற்காக நேற்று மாலத்தீவில் இருந்து இந்திய கடற்படை கப்பலில் இந்தியர்கள் உரிய பரிசோதனைக்கு பிறகு ஏற்றப்பட்டனர். இந்த கப்பல் நேற்று இரவு மாலத்தீவில் உள்ள மாலி துறைமுகத்தில் இருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்டு உள்ளது.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தை இந்த கப்பல் வந்தடைகிறது. இங்கு பயணிகளுக்கு கொரோனா உள்ளிட்ட பரிசோதனைகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்பிறகு அந்தந்த மாவட்டங்களுக்கு பயணிகள் அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், வ.உ.சி. துறைமுக நிர்வாகமும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.