ஒகேனக்கல் அருகே புதிய சோதனை சாவடி ; கலெக்டர் மலர்விழி நேரில் ஆய்வு

கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு காரணமாக தர்மபுரி மாவட்ட எல்லைப்பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Update: 2020-06-05 02:51 GMT
தர்மபுரி,

ஒகேனக்கல் அருகே ஆலம்பாடி பகுதியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் புதிய சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை சாவடியை கலெக்டர் மலர்விழி, போலீஸ் சூப்பிரண்டு ராஜன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்கள்.

கர்நாடகா மாநிலத்தில் இருந்து முறையான அனுமதியை பெறாமல் ஆலம்பாடி வழியாக தர்மபுரி மாவட்டத்திற்குள் நுழைபவர்களை தடுக்க வேண்டும், அதற்கான கண்காணிப்பு பணியில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று ஆய்வின்போது போலீசாருக்கு கலெக்டர் மலர்விழி அறிவுறுத்தினார். அப்போது பென்னாகரம் துணை போலீஸ் சூப்பிரண்டு மேகலா, ஒகேனக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் தண்டபாணி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்