உணவுக்காக பைகளை வைத்து இடம் பிடிக்கும் மக்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் உணவு பொட்டலங்கள் வாங்க வருபவர்கள் கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிப்பதற்காக தாங்கள் கொண்டு வந்த பொருட்களை வைத்து இடம் பிடித்து வருகின்றனர்.

Update: 2020-06-04 04:26 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர், 

கொரோனா காரணமாக கோவில்களில் அன்னதானம் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது. அதற்கு பதிலாக பொதுமக்கள், பக்தர்களுக்கு உணவு பொட்டலமாக வழங்கப்பட்டது. அதன்படி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தினமும் பொதுமக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வந்தன. உணவு பொட்டலங்கள் வாங்க வருபவர்கள் கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிப்பதற்காக தாங்கள் கொண்டு வந்த பொருட்களை வைத்து இடம் பிடித்து வருகின்றனர். பலர் வரிசைக்காக தங்கள் காலில் அணிந்திருந்த செருப்புகளை அடையாளத்திற்காக போட்டு வைத்துள்ளனர். அதேபோல் அம்மா உணவகத்தில் வழங்கப்படும் உணவு வாங்க வந்த பொதுமக்கள் தாங்கள் கொண்டு வந்த பைகளை வரிசைக்காக சாலையில் வரையப்பட்டுள்ள வட்டத்தில் இடம் பிடிப்பதற்காக வைத்துள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் வெயில் சுட்டெரித்து வருவதால் தாங்கள் கொண்டு வந்த செருப்பு மற்றும் பைகளை வரிசையில் வைத்துவிட்டு பொதுமக்கள் ஓரமாக நின்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்