சேலம் மாவட்டத்தில் 10.22 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள்
சேலம் மாவட்டத்தில் இந்த மாதத்திற்கு 10 லட்சத்து 22 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.
சேலம்,
சேலம் மெய்யனூர் மற்றும் சத்திரம் பகுதிகளில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்குகளிலிருந்து அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடைகளுக்கு கொண்டு செல்லும் பணியையும், அப்பொருட்களின் தரம் குறித்தும் மாவட்ட கலெக்டர் ராமன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சேலம் மாவட்டத்தில் 9 லட்சத்து 71 ஆயிரத்து 43 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1,000 வீதம் நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்பட்டுள்ள காரணத்தால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஏற்கனவே ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இலவசமாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் ஊரடங்கு மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளதால் ஜூன் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களையும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஒரு குடும்ப அட்டைதாரருக்கு ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நபர் ஒருவருக்கு கூடுதலாக 5 கிலோ வீதமாக உயர்த்தியும், 4 மற்றும் அதற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் இருக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் அரிசியை இரு மடங்காக உயர்த்தியும் ரேஷன் கடைகளில், விலையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1,577 ரேஷன் கடைகளின் மூலம் ஜூன் மாதத்திற்கான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் 10 லட்சத்து 21 ஆயிரத்து 935 குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று (அதாவது நேற்று) முதல் வழங்கப்பட்டு வருகின்றன. ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்க வரும் குடும்ப அட்டைதாரர்கள் கட்டாயம் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் ராமன் கூறினார்.
ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திரபிரசாத், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மாவட்ட மேலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் அமுதன் உள்பட பலர் உடன் இருந்தனர்.