கடல் சீற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை; அழிக்காலில் ரூ.9¼ கோடியில் தூண்டில் வளைவு அமைக்க அனுமதி

கடல் சீற்றத்தை கட்டுப் படுத்த அழிக்காலில் ரூ.9¼ கோடியில் தூண்டில் வளைவு அமைக்க தமிழக அரசு அனுமதி அளித்து ள்ளது. இதற்காக தளவாய்சுந்த ரத்தை சந்தித்து மீனவ பிரதிநிதிகள் நன்றி தெரிவித்தனர்.

Update: 2020-06-01 06:21 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்டம் ராஜாக் கமங்கலம் ஒன்றியத் துக்கு உட்பட்ட அழிக்கால் பகுதியில் அவ்வப்போது கடல் சீற்றம் ஏற்படுவது வழக்கம். அந்த பகுதியில் உள்ள மீனவ மக்களின் வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்து விடும்.

இதனால் மீனவர்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும். மேலும், வீடுகளில் தேங்கி கிடந்த மணலை அப்புறப்படுத்திய பிறகு மீண்டும் மீனவர்கள் அந்த வீடுகளுக்கு சென்று தங்குவார்கள். இத்தகைய சிரமத்தை அழிக்கால் பகுதி மீனவர்கள் அனுபவித்து வந்தனர்.

இதனையடுத்து அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் தங்களுடைய கிராமத்தில் கடல் சீற்றத்தை கட்டுப்படுத்த தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரத்திடம் கோரிக்கை வைத்தனர். அவர், அழிக்கால் பகுதி மீனவர்களின் சிரமத்தை போக்க அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் எடுத்துரை த்தார். அதன்படி அழிக்காலில் ரூ.9 கோடியே 35 லட்சத்தில் தூண்டில் வளைவு அமைக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட் டார்.

இந்த நிலையில் தூண்டில் வளைவு அமைக்க உத்தர விட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த தளவாய் சுந்தரத்துக்கும் மீனவ மக்கள் நன்றி தெரிவித்தனர். மேலும் அழிக்கால் பங்குத்தந்தை சோரிஸ், உப பங்குத்தந்தை ரீகன், அழிக்கால் கூட்டுறவு சங்க தலைவர் ஹெலன் பேபி சந்திரா, கூட்டுறவு சங்க செயலாளர் ஜெஸ்டின், உப தலைவர் ஜாண்சன், கணபதி புரம் பேரூர் செயலாளர் அண்ணாமலை, பங்குபேரவை நிர்வாகிகள் ஆகியோர் தளவாய்சுந்தரத்தை நேரில் சந்தித்து மீனவ மக்கள் சார்பில் நன்றி தெரிவித்தனர்.

நிகழ்ச்சியின் போது மாநில மீன்வள கூட்டுறவு இணைய தலைவர் சேவியர் மனோகரன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்