ஆரணியில் சென்னைக்கு மதுபாட்டில்கள் கடத்த முயன்ற 7 பேர் கைது 362 மதுபாட்டில்கள்-வாகனங்கள் பறிமுதல்
ஆரணியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, சென்னைக்கு மதுபாட்டில்கள் கடத்த முயன்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி உத்தரவின்பேரில், சப்இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
போந்தவாக்கம் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையின்போது, அந்த வழியாக வந்த ஆட்டோவை சந்தேகத்தின் பேரில், நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது, அதில் பெட்டி ஒன்றில் 170 மதுபாட்டில்களை சென்னைக்கு கடத்தி செல்வதை கண்டுபிடித்தனர்.
இது தொடர்பாக செங்குன்றம் தீர்த்தக்கரையம்பட்டியை சேர்ந்த வெங்கடேசன் (வயது 29), சுரேஷ் (42), கார்த்திக் (31) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து மது பாட்டில்கள் மற்றும் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் அதே போல், எஸ்.பி.கோவில் தெரு அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த மினிவேனை சோதனை செய்ததில் இரண்டு பெட்டிகளில் 96 மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக சென்னை கோயம்பேட்டை சேர்ந்த உதயகுமார் (32), மணிகண்டன்(24) ஆகிய இருவரை கைது செய்து, மது பாட்டில்கள் மற்றும் மினிவேனை பறிமுதல் செய்தனர்.
இதே பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது மோட்டார் சைக்கிளில் 96 பாட்டில்கள் கடத்தியது தொடர்பாக கன்னிகைபேர் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (22),துரைசாமி(40) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.