மீன்சுருட்டி அருகே 155 லிட்டர் சாராயம்-ஊறல் அழிப்பு 2 பேர் கைது

மீன்சுருட்டி அருகே 155 லிட்டர் சாராயம்- ஊறலை போலீசார் கைப்பற்றி அழித்தனர். இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

Update: 2020-05-10 06:22 GMT
மீன்சுருட்டி, 

மீன்சுருட்டி அருகே 155 லிட்டர் சாராயம்- ஊறலை போலீசார் கைப்பற்றி அழித்தனர். இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

மண்பானைகளில் சாராயம்

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி புதுத்தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 38). இவர் ரெட்டிப்பாளையம் அளவேரி கரையில் மண்பானையில் சுமார் 5 லிட்டர் சாராயம் வைத்து இருப்பதாக மீன்சுருட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா மற்றும் போலீசார் அங்கு சென்று, அந்த இடத்தை சுற்றி வளைத்தனர்.

மேலும் பாஸ்கரை பிடித்து, அவரிடம் இருந்து 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து பாஸ்கரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

150 லிட்டர் ஊறல் அழிப்பு

இதேபோல் மீன்சுருட்டி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சாராய ஊறல் போடப்பட்டு உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர்.

அப்போது காவேட்டேரி கிராமத்தில் உள்ள ஒரு வயலில் போடப்பட்டிருந்த சுமார் 150 லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு, அழிக்கப்பட்டது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, சாராய ஊறல் போட்டதாக குண்டவெளி கிராமத்தை சேர்ந்த ராஜசேகரை (வயது 55) போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்