மூலைக்கரைப்பட்டி அருகே, மழைக்கு வீடு இடிந்து பள்ளி மாணவன் காயம்

மூைலக்கரைப்பட்டி அருகே மழைக்கு வீடு இடிந்து பள்ளி மாணவன் காயமடைந்தான்.

Update: 2019-12-05 22:00 GMT
இட்டமொழி, 

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகேயுள்ள வடக்கு இளையார்குளத்தை சேர்ந்தவர் அர்ச்சுனன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி ரெஜினா. இவர்களுக்கு பாலகிரு‌‌ஷ்ணன்(வயது7) உள்ளிட்ட 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இதில் பாலகிரு‌‌ஷ்ணன் குசவன்குளத்தில் உள்ள டிடிடிஏ தொடக்கப்பள்ளியில் படித்து வருகிறான்.

நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் உள்ள அறையில் 2 குழந்தைகளையும் அர்ச்சுனனும், அவரது மனைவியும் படுக்க வைத்தனர். அப்போது அவர்களது வீட்டுச்சுவர் இடிவதை பார்த்த, ரெஜினா 2-வது குழந்தையை முதலில் தூக்கி கொண்டு வீட்டிற்கு வெளியே ஓடினார். அதற்குள் சுவர் இடிந்து விழுந்ததில் மூத்த குழந்தையான பாலகிரு‌‌ஷ்ணன் படுகாயம் அடைந்தான்.

உடனடியாக அவனை மீட்டு நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் மழை பெய்து வந்தது. இதில் வீட்டு சுவர் பழுதடைந்து இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. அந்த வீட்டை கிராம நிர்வாக அலுவலர் கிரு‌‌ஷ்ணன் பார்வையிட்டார்.

மேலும் செய்திகள்