குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு குறைந்தது - சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

குற்றாலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நேற்று குறைந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் அனுமதி அளித்தனர்.

Update: 2019-10-18 22:00 GMT
தென்காசி, 

குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய சீசன் காலங்கள் முடிந்த பின்னரும், குற்றாலம் அருவிகளில் தண்ணீர் மிதமான அளவில் விழுந்து வருகிறது. இதனால் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்துக்கு வந்து ஆனந்தமாக குளித்து செல்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. அதன் காரணமாக மாலை 5.45 மணிக்கு அனைத்து அருவிகளிலும் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். இதையடுத்து அங்கு வந்திருந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதனால் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

மேலும் செய்திகள்