செங்கோட்டையில் குப்பையில் கிடந்த ரேஷன் கார்டுகளால் பரபரப்பு

செங்கோட்டையில் குப்பையில் கிடந்த ரேஷன் கார்டுகளால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Update: 2019-10-06 22:15 GMT
செங்கோட்டை, 

செங்கோட்டையில் குப்பையில் கிடந்த ரேஷன் கார்டுகளால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

ரேஷன் கார்டுகள்

நெல்லை மாவட்டம் செங்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களின் 23 ரேஷன் கார்டுகள் செங்கோட்டை மேலூரில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகே உள்ள சாலையோரத்தில் குப்பைகள் கொட்டும் பகுதியில் கிடந்தது.

இதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் வருவாய்த்துறையினருக்கும், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ரேஷன் கார்டுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

விசாரணை

இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ரேஷன் கார்டுகளில் 2015-ம் ஆண்டு வரை இலவச வேட்டி, சேலை உள்ளிட்ட அரசின் அனைத்து இலவசங்களும் வாங்கியதற்கான பதிவுகள் உள்ளன. மேலும் அதில் உள்ள முகவரியில் உள்ளவர்களின் புகைப்படங்கள் மாறி இருப்பதும் தெரியவந்தது. ஸ்மார்ட் கார்டுகள் வந்த பின்பு ரேஷன் கார்டுகள் ரேஷன் கடைகளில் ஒப்படைக்கப்பட்டது. அவைஇங்கு போடப்பட்டுள்ளதா? அல்லது போலி ரேஷன் கார்டுகளா? என போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்