இட்டமொழி அருகே கோவில் கொடை விழாவில் பெண்கள், வில்லிசை கலைஞர்களிடம் ரெட்டியார்பட்டி நாராயணன் வாக்கு சேகரிப்பு

இட்டமொழி அருகே கோவில் கொடை விழாவில் பெண்கள், வில்லிசை கலைஞர்களிடம் அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் வாக்கு சேகரித்தார்.

Update: 2019-10-03 22:00 GMT
இட்டமொழி,

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன் போட்டியிடுகிறார். அவர் நேற்று இட்டமொழி அருகே உள்ள விஜயஅச்சம்பாட்டில் உள்ள கோவில் கொடை விழாவில் கலந்து கொண்டு சாமி கும்பிட்டார். பின்னர் முளைப்பாரி எடுத்து வந்த பெண்கள், வில்லிசை கலைஞர்களிடம் ரெட்டியார்பட்டி நாராயணன் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். முன்னதாக விஜயஅச்சம்பாடு பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் விஜிலா சத்யானந்த் எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து ம.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் நிஜாம், நெல்லை நாடார் உறவின்முறை சங்க தலைவர் எஸ்.எஸ்.எஸ்.நாதன் ஆகியோரை வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

மேலும் நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் அமைச்சர் ராஜலட்சுமி, மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா ஆகியோரை இந்து மக்கள் கட்சி தலைவர் உடையார், பொது செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டவர்கள் சந்தித்து அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தனர். இதில் குபேந்திராமணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட களக்காடு படலையார்குளம் ஊராட்சியில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திரா இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். இதில் நெல்லை மாவட்ட ஆவின் தலைவர் சுதா பரமசிவன், தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவர் என்.சின்னத்துரை, மாநகர் மாவட்ட அவை தலைவர் பரணிசங்கரலிங்கம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்