அம்பை அருகே ஊருக்குள் நுழைவுவாயில் அமைக்க பொதுமக்கள் முயன்றதால் பரபரப்பு

அம்பை அருகே ஊருக்குள் நுழைவுவாயில் அமைக்க பொதுமக்கள் முயற்சி செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-09-15 22:00 GMT
அம்பை, 

அம்பை அருகே ஊருக்குள் நுழைவுவாயில் அமைக்க பொதுமக்கள் முயற்சி செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நுழைவுவாயில்

அம்பை அருகே உள்ள பிரம்மதேசம் பஞ்சாயத்திற்குட்பட்ட கவுதமபுரியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது.

அதன் அருகில் சுதந்திர போராட்ட தியாகி ஒருவரது பெயரில் நுழைவு வாயில் அமைப்பதற்காக ஊர் பொதுமக்கள் சார்பில் காங்கிரீட் போட்டு கம்பிகள் பதித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அம்பை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். உரிய அனுமதியின்றி நுழைவுவாயில் அமைக்கக்கூடாது என தடுத்தனர்.

பேச்சுவார்த்தை

அதற்கு பொதுமக்கள் தாங்கள் இதுகுறித்து அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளதாக கூறி, நுழைவுவாயில் அமைக்கும் பணியை தொடர்ந்தனர். பின்னர் அம்பை தாசில்தார் வெங்கடேஷ், அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ஜாகிர்உசேன் ஆகியோர் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் முறையான அனுமதி பெற்று நுழைவுவாயில் அமைக்குமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து பொதுமக்கள் கம்பிகளை அகற்றிவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்