அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பாளையங்கோட்டையில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி நேற்று நடந்தது.

Update: 2019-09-15 21:45 GMT
நெல்லை, 

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பாளையங்கோட்டையில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி நேற்று நடந்தது.

அண்ணா பிறந்தநாள்

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நெல்லை பிரிவு சார்பில் மாவட்ட அளவிலான விரைவு சைக்கிள் போட்டி நேற்று காலை நடந்தது. இந்த போட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கத்தில் தொடங்கியது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உடற்கல்வியியல் துறை தலைவர் துரை போட்டியை தொடங்கி வைத்தார்.

போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். 13, 15, 17 வயதுக்கு உட்பட்ட பிரிவு என மூன்று பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.

பரிசளிப்பு

போட்டியின் முடிவில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது. நெல்லை மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயசித்ரா கலந்து கொண்டு பரிசு, சான்றிதழ்களை வழங்கினார்.

விழாவில் பயிற்றுனர்கள் கர்ணன், குமார மணிமாறன், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்