கடையநல்லூரில் ரூ.3 லட்சம் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் பறிமுதல் வியாபாரி கைது

கடையநல்லூரில் ரூ.3¼ லட்சம் வெளிமாநில லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வியாபாரி கைது செய்யப்பட்டார்.

Update: 2019-09-14 22:00 GMT
கடையநல்லூர், 

கடையநல்லூரில் ரூ.3¼ லட்சம் வெளிமாநில லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வியாபாரி கைது செய்யப்பட்டார்.

லாட்டரி சீட்டுகள் விற்பனை

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதிகளில் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக ஏராளமான புகார்கள் வந்தன. அதன்பேரில் கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தன், வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுகிறதா? என கண்காணித்து வந்தார்.

இந்த நிலையில் கேரளாவில் இருந்து கடையநல்லூருக்கு வெளிமாநில லாட்டரி சீட்டுகளை ஒருவர் கொண்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

கண்காணிப்பு

அதன்பேரில் கடையநல்லூர் புதிய பஸ் நிலையத்தில் கடையநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய்குமார் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பஸ்சில் இருந்து இறங்கிய ஒருவரை சந்தேகத்தின்பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் மேலக்கடையநல்லூர் பஜனைமடம் தென்வடல் தெருவை சேர்ந்த சீதாராமன் என்ற செல்லப்பா (வயது 61) என்பதும், அவர் கேரளாவில் இருந்து வெளிமாநில லாட்டரி சீட்டுகளை மொத்தமாக கொண்டு வந்து வியாபாரம் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து வெளிமாநில லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளின் மதிப்பு ரூ.3 லட்சத்து 25 ஆயிரம் ஆகும். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்