எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் நர்சிங் அதிகாரி பணி 200 பேருக்கு வாய்ப்பு

அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம் சுருக்கமாக எய்ம்ஸ் (AIIMS) என்று அழைக்கப்படுகிறது.

Update: 2019-07-08 10:06 GMT
இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் இதன் கிளை மருத்துவமனைகள், கல்லூரிகள் செயல்படுகின்றன. தற்போது சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள எய்ம்ஸ் கிளையில் நர்சிங் அதிகாரி பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. இது கிரேடு-2 தரத்திலான ஸ்டாப் நர்ஸ் பணியிடங்களாகும். மொத்தம் 200 பேர் தேர்வு செய்யப் படுகிறார்கள்.

இட ஒதுக்கீடு அடிப்படையில் பொது பிரிவினருக்கு 90 இடங்களும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 9 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 56 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 29 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 16 இடங்களும் உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

பி.எஸ்சி. நர்சிங், பி.எஸ்சி. (ஹான்ஸ்) நர்சிங் பட்டப்படிப்பு படித்தவர்கள், ஜெனரல் நர்சிங் மிட்வை பரி டிப்ளமோ படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் தங்கள் பெயரை நர்சிங் கவுன்சிலில் பதிந்து வைத்திருக்க வேண்டும். டிப்ளமோ படித்தவர்கள் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருப்பது அவசியம்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். வருகிற 21-ந் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படுவது குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.aiimsraipur.edu.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கவும்.

மேலும் செய்திகள்