சிதம்பரத்தில், கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் மர்ம சாவு

சிதம்பரத்தில் கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-06-28 22:00 GMT
சிதம்பரம்,

சிதம்பரம் அனந்தீஸ்வரர் கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் மகன் விஜய அய்யப்பன்(வயது 40). பஜார் தெருவில் பிரவுசிங் சென்டர்(கம்ப்யூட்டர் சென்டர்) வைத்து நடத்தி வந்தார். இவருடைய மனைவி சங்கீதா(35). இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சங்கீதா, விஜயஅய்யப்பனை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலையில் அய்யப்பனின் வீடு நீண்ட நேரமாக பூட்டிக்கிடந்தது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் கதவை தட்டிப்பார்த்தனர். இருப்பினும் கதவு திறக்கப்படவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுபற்றி நகர போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, வீட்டில் உள்ள ஒரு அறையில் விஜயஅய்யப்பன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய அய்யப்பன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்