நாகையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நாகையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-06-04 23:00 GMT
நாகப்பட்டினம்,

அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் பணி ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அந்துவன் சேரல் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ஜோதிமணி, வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில செயலாளர் பிரேம்சந்திரன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தேன்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன், ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க முன்னாள் மாநில பொருளாளர் நாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க மாநில துணைத்தலைவர் மோகன், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயலாளர் சித்ரா, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் சரவணன், இந்திய தொழிற்சங்க மைய மாவட்ட செயலாளர் சீனி.மணி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ராணி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்