காருக்கு போலி ஆர்.சி.புத்தகம் கொடுத்து நிதி நிறுவனத்தில் ரூ.5 லட்சம் மோசடி செய்தவர் கைது

குன்னத்தூரில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில்காருக்கானபோலி ஆர்.சி.புத்தம் கொடுத்து ரூ.5 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-06-03 23:00 GMT
குன்னத்தூர், 

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

குன்னத்தூரில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மேலாளராக கணேசன் என்பவர் இருந்து வருகிறார். இந்த நிதி நிறுவனம் இரண்டு மற்றும் நான்கு சச்கர வாகனங்கள் வாங்குவதற்கு கடனுதவி அளித்து வருகிறது.

இந்த நிதி நிறுவனத்திற்கு கடந்த ஆண்டு திருப்பூர் அங்கேரிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் (வயது 36) என்பவர் கார் ஆர்.சி.புத்தகத்தை கொடுத்து ரூ.5 லட்சம் கடன் வாங்கி உள்ளார். அதன்பின்னர் 2 நாட்கள் கழித்து அந்த ஆர்.சி.புத்தகத்தை நிதி நிறுவன உரிமையாளர் ஆய்வு செய்தபோது அது போலி ஆர்.சி.புத்தகம் என்று தெரியவந்தது. இது குறித்து குன்னத்தூர் போலீசில் கணசன்புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கேரிபாளையம் சென்று பிரகாசை தேடி வந்தனர். அப்போது அவர் தலைமறைவானது தெரியவந்தது.

இந்த நிலையில் அவர், அங்கேரிபாளையத்தில் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. உடனே போலீசார் அங்கு சென்று பிரகாசை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ஏராளமான போலி ஆர்.சி.புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை செய்தபோது போலி ஆர்.சி.புத்தகத்தை அவரே பிரிண்ட் செய்தது தெரியவந்தது. இதையடுத்து இந்த மோசடியில் வேறு யாரும் ஈட்டு்ள்ளனரா? இதுவரை எத்தனை போலி ஆர்.சி.புத்தகம் அச்சடித்துள்ளார்? இது போல் வேறு எங்காவது மோசடி செய்துள்ளாரா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்