நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2019-05-21 22:45 GMT
நெல்லை,

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினத்தையொட்டி தேசிய கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் ஷில்பா தலைமையில் அரசு ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

அப்போது கலெக்டர் ஷில்பா கூறுகையில், நாட்டில் சகிப்புத்தன்மை மற்றும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை பெருக வேண்டும். அதில் நாம் ஒவ்வொருவரும் தனி கவனம் செலுத்த வேண்டும். நாட்டில் அமைதி பெருக தனி நபர் ஒழுக்கம் மற்றும் பொதுநலன் அதிக அளவில் கருத்தில் கொள்ள வேண்டும். வன்முறையை எப்பொழுதும் எக்காரணம் கொண்டும் பொதுமக்கள் ஆதரிக்கக்கூடாது. அதனை இரும்புக்கரம் கொண்டு அனைவரும் ஒடுக்க வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் கணேஷ்குமார், சமூக பாதுகாப்பு திட்ட உதவி கலெக்டர் சுகி பிரேமலா, கலெக்டர் அலுவலக மேலாளர் அபுபர் ரஹ்மான் மற்றும் தாசில்தார்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்