வானவில் : மினி புளூடூத் மவுஸ்

தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் மிகச் சிறிய அளவிலும், அதி நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டதாகவும் வரத்தொடங்கியுள்ளன.

Update: 2019-03-20 10:20 GMT
கம்ப்யூட்டர், லேப்டாப்களில் பயன்படுத்தும் மவுஸ்களில் பல்வேறு வசதிகள் கொண்ட மவுஸ்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் விரலில் மாட்டிக் கொண்டு செயல்படுத்தும் வகையிலான மினி மவுஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. EIGIIS என்ற பெயரிலான இந்த மவுஸ் வயர்லெஸ் முறையில் செயல்படக் கூடியது. இதை விரலில் அணிந்துகொண்டு செயல்படுத்த முடியும். எர்கோனாமிக் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மவுஸை பயன்படுத்துவதன் மூலம் மணிக்கட்டில் ஏற்படும் வலியைத் தவிர்க்க முடியும்.

இது புளூடூத் மூலம் வயர்லெஸ் அடிப்படையில் செயல்படக் கூடியது. 10 மீட்டர் சுற்றளவில் இருந்தாலும் இது செயல்படும். இதில் ஒரு ஏஏஏ பேட்டரி உள்ளது. இது உபயோகத்தில் இல்லாதபோது ஸ்லீப் மோடிற்கு சென்றுவிடும். ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படும் ஸ்மார்ட்போன், டேப்லெட் போன்றவற்றுக்கு ஏற்றது. மேக் ஓ.எஸ். தளத்தில் இது செயல்பட்டாலும், ஆப்பிள் ஐ பேட், ஐபோன் ஆகியவற்றில் இது செயல்படாது என்பது இதில் உள்ள குறைபாடாகும். அமேசான் இணையதளத்தில் கிடைக்கும் இந்த மினி மவுஸை ரூ.2,618 விலையில் வாங்கலாம்.

மேலும் செய்திகள்