கம்பைநல்லூரில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த கொசு ஒழிப்பு பணி தீவிரம்

கம்பைநல்லூரில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த கொசு ஒழிப்பு பணி தீவிரம்

Update: 2017-10-28 22:30 GMT

மொரப்பூர்,

கம்பைநல்லூர் கடைவீதியை சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மகன் சூர்யபிரகாஷ் (வயது 13). அங்குள்ள அரசு பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவனுக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் மாணவன் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். தீவிர சிகிச்சைக்கு பிறகு மாணவன் வீடு திரும்பினான். இந்த நிலையில் கம்பைநல்லூர் பேரூராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த காரிமங்கலம் தாசில்தார் கண்ணன் தலைமையில் பேரூராட்சி அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள் கடைவீதி, பூங்காவீதி உள்ளிட்ட பகுதிகளில் கொசு ஒழிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும் டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தேங்காய் ஓடுகள், பிளாஸ்டிக் பொருட்களை அகற்றி சுத்தம் செய்தனர். இதில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஜீவானந்தம், டாக்டர் வேல்முருகன், வருவாய் ஆய்வாளர் உமாபதி, கிராம நிர்வாக அலுவலர் செல்வம், பேரூராட்சி உதவியாளர் வெங்கடாசலம், சுகாதார ஆய்வாளர் சீனிவாசன் ஆகியோர் கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்