வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் ரூ.200 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு

புதுவையில் வங்கி ஊழியர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டம் நடத்தினர். இதனால் ரூ.200 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

Update: 2017-08-22 23:15 GMT

புதுச்சேரி,

வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க கூடாது என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் நேற்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுவையில் 185 வங்கி கிளைகளை சேர்ந்த 4 ஆயிரம் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தினால் புதுவையில் சுமார் ரூ.200 கோடி அளவிற்கான வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

வங்கி ஊழியர்கள் அனைவரும் பணிகளை புறக்கணித்து நேற்று காலை அரசு பொது மருத்துவமனை எதிரே உள்ள யூகோ வங்கியின் முன்பு ஒன்று கூடினர். அங்கு அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது மத்திய அரசை கண்டித்தும், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோ‌ஷங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தின் காரணமாக நேற்று வங்கிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் அவதி அடைந்தனர்.

மேலும் செய்திகள்