புதுவை அம்பாள் நகரில் புதிய மருத்துவமனை திறப்பு

புதுவை அம்பாள் நகர் மெயின்ரோட்டில் "தி பாஷ்" ஆர்த்தோ ஸ்பெஷாலிட்டி என்ற பெயரில் புதிய மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது.

Update: 2017-05-03 21:30 GMT

புதுச்சேரி,

புதுவை அம்பாள் நகர் மெயின்ரோட்டில் "தி பாஷ்" (பாண்டி ஆர்த்தோ ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல்) என்ற பெயரில் புதிய மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் வீரப்பன், சுபத்ரா வீரப்பன் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். விழாவில் முன்னாள் முதல்–அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ரங்கசாமி கலந்துகொண்டு புதிய மருத்துவமனையை திறந்துவைத்தார். ஆபரே‌ஷன் தியேட்டரை அமைச்சர் நமச்சிவாயம் திறந்துவைத்தார்.

நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் கோகுலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், மற்றும் என்.எஸ்.ஜே.ஜெயபால் எம்.எல்.ஏ., முன்னாள் சபாநாயகர் சபாபதி, முன்னாள் எம்.எல்.ஏ. தமிழ்ச்செல்வன், சம்பத், ஜவகர் மற்றும் டாக்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இந்த மருத்துவமனையில், முதுகெலும்பு ஆபரே‌ஷன், மூட்டுமாற்று அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு சிகிச்சை, நொண்டி நடப்பதை சரி செய்யும் சிகிச்சை, பிளாஸ்டிக் சர்ஜரி உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் 24 மணிநேரமும் செயல்படும் அவசர சிகிச்சை பிரிவு, அல்ட்ரா சவுண்டு எக்கோ, டிஜிட்டல் எக்ஸ்ரே, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. மேலும் 24 மணிநேரமும் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை மருத்துவர்கள், மயக்கவியில் நிபுணர்கள் பணியில் இருக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்