ராதாபுரம், கூடங்குளம், பணகுடி பகுதிகளில் காற்றாலைகளில் ஒயர் திருடிய 3 பேர் கைது

ராதாபுரம், கூடங்குளம், பணகுடி பகுதிகளில் உள்ள காற்றாலைகளில் ஒயர் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-03-08 19:30 GMT

ராதாபுரம்,

ராதாபுரம், கூடங்குளம், பணகுடி பகுதிகளில் உள்ள காற்றாலைகளில் ஒயர் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

காற்றாலைகளில் ஒயர் திருட்டு

நெல்லை மாவட்டம் ராதாபுரம், கூடங்குளம், பணகுடி பகுதிகளில் ஏராளமான காற்றாலைகள் உள்ளன. இந்த காற்றாலைகளில் சில மாதங்களாக தாமிர ஒயரை மர்ம நபர்கள் திருடிச் சென்று உள்ளனர்.

இதுகுறித்து காற்றாலைகளில் மேலாளர்கள், ராதாபுரம் போலீசில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் மர்ம நபர்கள் ராதாபுரத்தில் உள்ள கடைகளில் ஒயர்களை விற்க முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த ராதாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது, அங்கு ஒயர்களை விற்க முயன்ற 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

3 பேர் கைது

விசாரணையில், அவர்கள் ராதாபுரம் அருகே உள்ள தெற்கு வேப்பிலான்குளத்தை சேர்ந்த சுடலைக்கண்ணு (வயது 55), தளவாய் பாண்டி (24), திருக்குறுங்குடியைச் சேர்ந்த பழனி (52) என்பதும், அவர்கள் 3 பேரும் தான் ராதாபுரம், கூடங்குளம், பணகுடிகளில் உள்ள காற்றாலைகளில் ஒயர்களை திருடி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட ஒயர்களின் மதிப்பு ரூ.12 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் ராதாபுரம், கூடங்குளம், பணகுடி ஆகிய போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்