அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்களை நியமிக்க எதிர்ப்பு தெரிவித்து கடலூரில், அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்

பணிநிரவல் அடிப்படையில் அரசு கல்லூரிகளில் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்களை நியமிக்க எதிர்ப்பு

Update: 2017-02-03 23:15 GMT

கடலூர்,

கடும் எதிர்ப்பு

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உபரியாக உள்ள நூற்றுக்கணக்கான பேராசிரியர்களை பணிநிரவல் அடிப்படையில் அரசு கல்லூரிகளில் நியமிப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

அவர்களை அரசு கல்லூரிகளில் நியமிப்பதை கைவிடக்கோரியும், ஏற்கனவே செய்யப்பட்ட நியமனங்களை ரத்துசெய்யக்கோரியும் கடலூர் அரசு கல்லூரி ஆசிரியர்கள் கடந்த 3 நாட்களாக கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினார்கள்.

ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில் கடலூர் அரசு கல்லூரியில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களும் நேற்று காலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பணி நிரவல் அடிப்படையில் அரசு கல்லூரிகளில் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்களை நியமித்தால் கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணி பாதுகாப்பற்ற நிலை ஏற்படும் என்பதால் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசியரிகளின் பணிநிரவலை ரத்து செய்யக்கோரியும், கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணிப்பாதுகாப்பு வழங்கக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு கவுரவ விரிவுரையாளர்கள் சங்க கடலூர் கிளைத்தலைவர் பொன்னம்பலம் தலைமை தாங்கினார். செயலாளர் ஆனந்தன், மண்டல தலைவர் கண்ணதாசன் மற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்