குடியாத்தத்தில் ‘ஹெல்மெட்’ விழிப்புணர்வு ஊர்வலம்

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவின்பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கரன் மேற்பார்வையில் குடியாத்தம் டவுன் போலீசாரின் ‘ஹெல்மேட்’ விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலம் புதிய பஸ்நிலையத்தில் தொடங்கி நகரின் முக்

Update: 2017-01-05 22:15 GMT

குடியாத்தம்,

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவின்பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கரன் மேற்பார்வையில் குடியாத்தம் டவுன் போலீசாரின் ‘ஹெல்மேட்’ விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலம் புதிய பஸ்நிலையத்தில் தொடங்கி நகரின் முக்கிய பகுதிகளில் சென்று மீண்டும் புதிய பஸ்நிலையம் அருகே நிறைவடைந்தது.

ஊர்வலத்தில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன், சப்–இன்ஸ்பெக்டர்கள் அஜந்தா, வெங்கடபதி, வெங்கடேசன், போக்குவரத்து போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், கிருபாகரன், பாண்டியன் உள்பட ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர்.

முன்னதாக ஆட்டோ டிரைவர்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன் பேசுகையில், ‘குடியாத்தம் உட்கோட்டத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட சாலை விபத்துகளில் 61 பேர் பலியாகி உள்ளனர். 254 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 7 பேர் ஹெல்மெட் அணிந்ததால் கடுமையான விபத்தின்போதும் உயிர் தப்பி உள்ளனர். வாகன ஓட்டிகள் தங்களை நம்பி உள்ள குடும்பத்தினரை எண்ணி, பாதுகாப்பான மோட்டார் சைக்கிள் பயணத்துக்கு கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும்’ என்றார்.

மேலும் செய்திகள்