உலக கோப்பை போட்டி; வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆந்த்ரே ரஸ்செல் காயத்தினால் விலகல்

உலக கோப்பை போட்டி தொடரில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆந்த்ரே ரஸ்செல் காயத்தினால் விலகியுள்ளார்.;

Update:2019-06-24 20:54 IST
இங்கிலாந்து நாட்டில் 12வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்குள் நுழையும்.

இதில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆந்த்ரே ரஸ்செலுக்கு இடது முழங்காலில் காயம் ஏற்பட்டு உள்ளது.  இதனால் ரஸ்செல் போட்டி தொடரில் இருந்து விலகியுள்ளார்.  ரஸ்செலுக்கு பதிலாக சுனில் ஆம்பரீஸ் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் காயத்தினால் ரஸ்செல் விளையாடவில்லை.  அந்த போட்டியில் நியூசிலாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேலும் செய்திகள்