சென்னை – ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி: டிக்கெட் விற்பனை

சென்னை – ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டிக்கு உரிய டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது.;

Update:2019-04-20 12:14 IST
சென்னை,

சென்னை – ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல். போட்டி வரும் 23-ம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது.

கடந்த போட்டியில் ஐதராபாத் அணியுடனான தோல்வியை ஈடுகட்ட இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

14 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் இன்னும் ஒரு போட்டியில் வென்றால் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்து விடலாம் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. 5 ஆயிரம் மற்றும் 6 ஆயிரத்து 500 ரூபாய் டிக்கெட்கள் ஆன்லைனில் மட்டும் விற்பனை செய்யப்படுகின்றன.

1300 மற்றும் 2500 ரூபாய் டிக்கெட்கள் கவுண்டர்களில் விற்கப்படுகின்றன. ஆனால் முறையான அறிவிப்பு இல்லாததாலும், தொடர் விடுமுறையால் மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டதாலும் டிக்கெட்களை வாங்க ரசிகர்கள் கூட்டம் குறைவாகவே உள்ளது.

மேலும் செய்திகள்