மீண்டும் நடிகர் ரஜினிக்கு ஜோடியாகும் பிரபல நடிகை ..?

நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' படத்தை தொடர்ந்து அடுத்ததாக புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார்

Update: 2022-02-15 09:02 GMT
சென்னை

டைரக்டர்  சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' படத்தை தொடர்ந்து அடுத்ததாக ரஜினி புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய ,இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். அதிரடி குடும்ப கதையம்சம் உள்ள படமாக தயாராவதாக கூறப்படுகிறது.

 படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்க உள்ளனர். இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகை தேர்வு நடக்கிறது. நாயகியாக நடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 
   


 ரஜினிகாந்திற்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் 2010-இல் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'எந்திரன்' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் தலைவர் 169 படத்தில் இந்த ஜோடி மீண்டும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்