சரத்குமாரின் 150 - வது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சரத்குமாரின் ‘தி ஸ்மைல் மேன்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.;

Update:2024-12-13 18:34 IST

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் சரத்குமார். இதுவரை 100-ம் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார், கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன், போர் தொழில், பரம் பொருள் ஆகிய திரைப்படத்தின் நடித்ததன் மூலம் சரத் குமாருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கடந்த மாதம் வெளியான ஹிட் லிஸ்ட் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அடுத்தடுத்து போலீஸ் கதாபாத்திரத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டு இவரது 150- வது படமான 'தி ஸ்மைல் மேன்' என்ற படத்தில் ஒப்பந்தமானார். இப்படத்தை ஷ்யாம் பர்வீன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் மெமரீஸ் என்ற திரைப்படத்தை இயக்கியவர் ஆவார். சரத்குமாருடன் சிஜா ரோஸ், இனியா, ஜார்ஜ் மர்யான் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சரத்குமார் இப்படத்தில் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட ஓய்வு பெற்ற போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார், அவரது ஞாபகம் அழிவதற்குள் அவர் ஒரு தொடர் கொலைகள் செய்த குற்றவாளியை பிடிக்க வேண்டும். இதை மையமாக வைத்து படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளது.


'தி ஸ்மைல் மேன்' படத்தின் டீசர் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் சரத்குமார் நடித்த 'தி ஸ்மைல் மேன்' படம் வரும் 27ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்