'சூர்யா 45' படத்தில் திரிஷா அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்ட படக்குழு

ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் சூர்யா 45 படத்தின் படப்பிடிப்பு பணிகள் கோவையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Update: 2024-12-14 01:15 GMT

தமிழ் திரை உலகில் 22 ஆண்டுகளாக தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் திரிஷா. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் திரிஷா நடித்த குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இவர் தற்போது அஜித்துடன் 'விடாமுயற்சி, குட் பேட் அக்லி' மற்றும் கமலின் 'தக் லைப்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவியுடன் 'விஸ்வம்பரா' படத்திலும், மலையாளத்தில் இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார். இதற்கிடையில், ஆர்.ஜே.பாலாஜி நடிகர் சூர்யாவை வைத்து இயக்கி வரும் 'சூர்யா 45' படத்தில் நடிகை திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதனை உறுதி படத்தும் விதமாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா மற்றும் திரிஷா இணைந்து நடிப்பதால் இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு கூடுதல் எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.

மேலும், இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் கோயம்புத்தூர் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடிகை திரிஷா வக்கீலாக நடிப்பதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்