உங்களை பாதுகாத்து கொள்வதே குடும்பத்தினருக்கும், உறவினருக்கும் நீங்கள் தரும் மிகப்பெரிய பரிசு - ரஜினிகாந்த்
எந்த நாட்டில் வாழ்கிறீர்களோ, அந்நாடு விதித்திருக்கும் கட்டுப்பாடுகளை கடைபிடித்து பாதுகாத்துக்கொள்ளுங்கள் என்று வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் விடீயோ பதிவை ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது:- “ வெளிநாடுகளில் வாழும் தமிழக மக்களுக்கு இந்த புதிய ஆண்டு இனிதான ஆண்டாக அமைய வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன். கொரோனா வைரசால் முழு உலகமும் பாதிப்படைந்துள்ளது. இதற்கு இந்தியாவோ, தமிழ்நாடோ விதி விலக்கல்ல.
உங்களை பிரிந்து வாழும் உறவினர்களும் குடும்பத்தினரும் உங்களை பற்றியே சிந்திக்கின்றனர். கவலை கொண்டுள்ளனர். நீங்கள் எந்த நாட்டில் வாழ்கிறீர்களோ, அந்த நாட்டு அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளை தவறாது கடைபிடித்து உங்களை நீங்கள் பாதுகாத்துக்கொள்ளுங்கள். இதுதான் உங்கள் குடும்பத்தினருக்கும் உறவினருக்கும், இந்த ஆண்டு நீங்கள் கொடுக்கும் மிகப்பெரிய பரிசு. நலமுடன் வாழ்க. கவலைப்படாதீங்க.. இதுவும் கடந்து போகும்” என்று தெரிவித்துள்ளார்.
உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு எனது புத்தாண்டு வாழ்த்துகள். 🙏🏻 #StayHomeStaySafe#PracticeSocialDistancing#இதுவும்_கடந்து_போகும்#EvenThisWillPasspic.twitter.com/hkwLqORr8q
— Rajinikanth (@rajinikanth) April 14, 2020