நவீன் பொலிஷெட்டி படத்தில் இருந்து ஸ்ரீலீலா விலகல்...புதிய கதாநாயகி அறிவிப்பு

நாக வம்சி தயாரிக்கும் 'அனகனக ஓக ராஜு' படத்தில் நவீன் பொலிஷெட்டி நடித்து வருகிறார்.;

Update:2024-12-27 13:06 IST
Sreeleela opts out of Naveen Polishettys film...new heroine announced

சென்னை,

தெலுங்கு சினிமாவில் இளம் நடிகராக வலம் வருபவர் நவீன் பொலிஷெட்டி. இவர் தொடர்ந்து 3 வெற்றிப்படங்களை கொடுத்து சாதனை படைத்து, தற்போது உள்ள இயக்குனர்களால் மிகவும் விரும்பப்படும் நடிகராக மாறியுள்ளார்.

இவருக்கு சமீபத்தில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதன் காரணமாக நடிப்பில் இருந்து விலகி ஓய்வெடுத்து வந்தார். தற்போது அதிலிருந்து குணமாகியுள்ள நவீன் பொலிஷெட்டி, தயாரிப்பாளர் நாக வம்சி தயாரிக்கும் 'அனகனக ஓக ராஜு' படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை அறிமுக இயக்குனர் மாரி இயக்குகிறார். இப்படத்தில் நடிகை ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்க இருந்தார். ஆனால், இப்படத்தின் படப்பிடிப்புக்கான கால அட்டவணை கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்ட காரணத்தால் அவர் விலகியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், டீசர் ஒன்றை வெளியிட்டு புதிய கதாநாயகியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, மீனாட்சி சவுத்ரி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் இதற்கு முன்பு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான 'லக்கி பாஸ்கர்' படத்தில் நடித்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்