"கிங்டம்" - இலங்கை சென்ற பாக்யஸ்ரீ போர்ஸ்
இப்படம் வருகிற மே மாதம் 30-ம் தேதி வெளியாக உள்ளது.;
கொழும்பு,
கவுதம் தின்னனுரி இயக்கி வரும் படம் "கிங்டம்". இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடிக்கிறார். தற்போது படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் இருந்தபோதிலும், கதாநாயகி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு இன்னும் வெளியிடவில்லை.
பாக்யஸ்ரீயும் தனது சமூக ஊடகங்களில் 'கிங்டம்'பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், முழு "கிங்டம்" டீமும் அடுத்த படப்பிடிப்புக்காக இலங்கை சென்றுள்ளது. அங்கு இரண்டு காதல் பாடல்கள் படமாக்கப்படும் என தெரிகிறது.
இப்படம் வருகிற மே மாதம் 30-ம் தேதி வெளியாக உள்ளது.