'ஓ.டி.டிக்கு தேவை நடிகர்கள்தான் நட்சத்திரங்கள் அல்ல' - பாலிவுட் நடிகர் பரபரப்பு பேச்சு

இவர் தனது படங்களை விட ஓடிடியில் வெளியான வெப் தொடர்களின் மூலம் பரவலாக பேசப்படுகிறார்.

Update: 2024-12-27 06:04 GMT

மும்பை,

பிரபல பாலிவுட் நடிகர் கே கே மேனன். இவர் 'பிளாக் பிரைடே', 'தீவர்', 'சர்க்கார்', 'குலால்', 'ஹைதர்', 'பேபி' போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். மேலும், ஓ.டி.டியில் வெளியான ஸ்பெஷல் ஆப்ஸ், பார்ஸி, தி ரெயில்வே மென் மற்றும் சிட்டாடல்: ஹனி பன்னி போன்ற வெப் தொடர்களிலும் நடித்திருக்கிறார்.

இவர் தனது படங்களை விட ஓ.டி.டியில் வெளியான வெப் தொடர்களின் மூலமே பரவலாக பேசப்படுகிறார். இந்நிலையில் நடிகர் கே கே மேனன் 'ஓ.டி.டிக்கு நடிகர்கள்தான் தேவை நட்சத்திரங்கள் இல்லை என்று பரபரப்பாக பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,

'30 வருடங்களாக சினிமா துறையில் இருக்கும் எனக்கு, ஒரு பிளாக்பஸ்டர் படத்திலோ அல்லது வேறுவிதமான படத்திலோ நடிக்காமல் இருப்பது ஒரு நடிகனாக என் மதிப்பை குறைத்துவிடும் என்று நினைத்ததில்லை.

நான் சினிமாவுக்கு வந்த முதல் ஐந்து ஆண்டுகளில், இந்த எண்ணம் என் மனதில் தோன்றியிருக்கலாம். ஆனால், இப்போது திரைப்படங்களில் நடிக்கும் நட்சத்திரங்களுக்கு இணையாக ஓ.டி.டியின் மூலம் எனக்கு பாராட்டு கிடைக்கிறது. அதற்கு நடிகராக இருந்தால் போதும் நட்சத்திரமாக இருக்க வேண்டியதில்லை' என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்