இந்த வார விசேஷங்கள்: 10-9-2024 முதல் 16-9-2024 வரை

14-ம் தேதி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் மாடவீதி புறப்பாடு, திருவரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சனம்.

Update: 2024-09-10 05:19 GMT

10-ந் தேதி (செவ்வாய்)

* விருதுநகர் சுவாமி குதிரை வாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் பவனி.

* சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட பூமாலை சூடியருளல்.

* திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.

* சமநோக்கு நாள்.

11-ந் தேதி (புதன்)

* மதுரை சோமசுந்தரர் வளையல் விற்றருளிய காட்சி, இரவு சுவாமி பட்டாபிஷேகம்.

* அகோபிலமடம் ஸ்ரீமத் 2-வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திர வைபவம்.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.

* சமநோக்கு நாள்.

12-ந் தேதி (வியாழன்)

* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூல தீர்த்தம்.

* சுவாமிமலை முருகப் பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

* திருப்பதி ஏழுமலை யான் புஷ்பாங்கி சேவை.

* திருபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு.

* கீழ்நோக்கு நாள்.

13-ந் தேதி (வெள்ளி)

* சங்கரன்கோவில் கோம தியம்மன் தங்க பாவாடை தரிசனம்.

* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்க பல்லக்கில் புறப்பாடு.

* திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் புறப்பாடு.

* திருத்தணி முருகப் பெருமான் கிளி வாகன சேவை.

* கீழ்நோக்கு நாள்.

14-ந் தேதி (சனி)

* சர்வ ஏகாதசி.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் மாடவீதி புறப்பாடு.

* திருவரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சனம்.

* திருமாலிருஞ்சோலை கள்ளழகர், மதுரை கூடலழகர் தலங்களில் சுவாமி புறப்பாடு.

மேல்நோக்கு நாள்.

15-ந் தேதி (ஞாயிறு)

* முகூர்த்த நாள்.

* ஓணம் பண்டிகை.

* மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் சட்ட தேரில் பவனி, இரவு சப்தாவர்ணம்.

* சாத்தூர் வேங்கடேச பெருமாள் தோளுக்கினியானில் பவனி.

* மேல்நோக்கு நாள்.

16-ந் தேதி (திங்கள்)

* முகூர்த்த நாள். மிலாடி நபி.

* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம்.

* திருத்தணி முருகனுக்கு பால் அபிஷேகம்.

* மேல்நோக்கு நாள்.

Tags:    

மேலும் செய்திகள்