ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: ரசாயன நுரையுடன் வருவதால் விவசாயிகள் அதிர்ச்சி
ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து ரசாயன நுரையுடன் வருவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஓசூர்:
கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றின் வழியாக ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று, ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு வினாடிக்கு 1,452 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 1,280 கனஅடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது.
கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரங்களில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து ரசாயன கழிவுநீர் தென்பெண்ணை ஆற்றில் கலப்பதால் கெலவரப்பள்ளி அணையில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுநீர் நுங்கும், நுரையுமாக உள்ளது. மேலும் அணை பகுதியில் நுரை குவிந்து கிடப்பதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.