காதல் வலையில் இளம் நடிகைகள்

Update:2023-04-21 08:28 IST

நடிகைகளையும், காதல் கிசுகிசுக்களையும் பிரிக்க முடியாது என்ற அளவுக்கு எப்போதும் சக நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், தொழில் அதிபர்கள் போன்றோருடன் இணைத்து பேசப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். காதல் நிஜமாக இருந்தாலும் கடைசிவரை ரகசியமாகவே வைத்து இருப்பதும் உண்டு.

திருமணத்துக்கு தயாராகும்போது மட்டுமே அதை அம்பலப்படுத்துவர். சில காதல் `திருமணம் வரை செல்லும், இன்னும் சில காதல்' பாதியிலேயே முறிந்து விடும்.இன்றைய தேதியில் காதல் வளையத்துக்குள் இருக்கும் சில நடிகைகள் பற்றிய விவரங்கள்:-

கமல்ஹாசன் மகள் என்ற அந்தஸ்தோடு சினிமா துறையில் நுழைந்த சுருதிஹாசன், லண்டனைச் சேர்ந்த நாடக நடிகர் மைக்கேல் கார்சேலுவை காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தது. இருவரும் ஜோடியாக சுற்றும் புகைப்படங்கள் வெளியானது. சென்னைக்கும் அவரை அழைத்து வந்து குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைத்தார். இருவருக்கும் திருமணம் நடக்கலாம் என்று எதிர்பார்த்த நிலையில் பிரிந்து விட்டனர்.

இப்போது டெல்லியைச் சேர்ந்த டூடுல் கலைஞர் சாந்தனு கசாரியாவை காதலிப்பதாக பேச்சு கிளம்பியது. காதலை உறுதிப்படுத்துவதுபோல் இருவரும் ஜோடியாகவும், நெருக்கமாகவும் இருக்கும் புகைப்படங்களை சுருதிஹாசன் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

தமன்னாவும் காதல் வலையில் சிக்கி உள்ளார். இந்தி நடிகர் விஜய்வர்மாவை அவர் காதலிப்பதாக தகவல். இதனை ஆரம்பத்தில் மறுத்த தமன்னா பின்னர் ஒருபார்ட்டியில் அவரை கட்டிப்பிடித்து ஆடினார். விஜய் வர்மாவுக்கு சூடான முத்தமும் கொடுத்தார். இந்த புகைப் படங்கள் வெளியான நாளிலிருந்து மறுப்பு சொல்லாமல் அமைதியாகிப் போனார்.

பூஜாஹெக்டே முரட்டு சிங்கிள் நடிகரான சல்மான்கானுடன் இணைத்து பேசப்பட்டு வருகிறார். `சல்மான்கானும், நீங்களும் காதலிக்கிறீர்களாமே' என்ற கேள்விக்கு, `அது எனக்கு மகிழ்ச்சிதான்' என்று கூறி பர பரப்பை பற்றவைத்தார். தற்போது `வீரம்' இந்தி ரீமேக்கில் சல்மான்கான் ஜோடியாக நடிக்கிறார். தான் நடிக்கும் 2 புதிய படங்களில் பூஜா ஹெக்டேவை ஜோடியாக புக் செய்திருக்கிறார், சல்மான்கான். `இதெல்லாம் காதல் செய்யும் லீலை' என கிசுகிசுக்கின்றனர்.

தெலுங்கு நடிகர் விஜய்தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் காதலிப்பதாக தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. வெளிநாடுகளுக்கு சென்றும் சுற்றுகிறார்கள். கேட்டால் படப்பிடிப்புக்காக என்று சமாளிக்கவும் செய்கிறார்கள். இதெல்லாம் காதலை அவர்கள் மறைக்க படாத பாடு படுவதை அழகாகவே சொல்கிறது. இதற்கிடையில் கிரிக்கெட் வீரருடன், இணைத்து பேசப்பட்ட நிலையில், `அதெல்லாம் இல்லை' என்று ராஷ்மிகா ஓபன் டாக்கும் கொடுத்திருக்கிறார்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க கிணற்றில் போட்டகல்லாகவே அனுஷ்கா-பிரபாஸ் காதல் இருக்கிறது.அதேவேளை கீர்த்திசனோனுடன், பிரபாஸ் காதலில் இருக்கிறார் என்றும், அனுஷ்காவுக்கு விரைவில் தொழில் அதிபர் ஒருவருடன் திருமணம் என்றும் பேசப்படுகிறது.

கீர்த்தி சுரேஷுக்கும் கேரள அரசியல்வாதி மகனுக்கும் காதல், திருமணம் என்றெல்லாம் பேசினர். பிறகு தொழில் அதிபர் ஒருவரை மணக்க இருப்பதாகவும் தகவல் பரவியது.

இவர்களில் யார் யாரெல்லாம் காதலில் நீந்தி திரு மணம் வரை செல்வார்கள். யார் பாதியில் முறித்துக்கொண்டு கிளம்புவார்கள் என்பதெல்லாம் கடைசியில்தான் தெரியவரும்.

Tags:    

மேலும் செய்திகள்