உடல் முழுவதும் ரத்தத்தோடு பெண் - கேன்ஸ் திரைப்பட விழாவில் பரபரப்பு..!

கேன்ஸ் திரைப்பட விழாவில் உக்ரைனிய தேசியக் கொடி நிறத்தில் உடையணிந்து வந்த பெண், திடீரென போலி ரத்தத்தை உடல் முழுவதும் ஊற்றிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-05-22 16:47 GMT

பாரீஸ்,

கேன்ஸ் திரைப்பட விழாவில் உக்ரைனிய தேசியக் கொடி நிறத்தில் உடையணிந்து வந்த பெண், திடீரென போலி ரத்தத்தை உடல் முழுவதும் ஊற்றிக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பிரான்சில் 76-வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா மே 16-ந்தேதி தொடங்கியது. வருகிற 27-ந்தேதி வரை 12 நாட்கள் விழா கோலாகலமுடன் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பை எதிர்த்து உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் விதமாக விழாவின் போது ஒரு பெண் உக்ரைனிய தேசியக் கொடி நிறத்தில் உடையணிந்து வந்தார். பின்னர், திடீரென ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த ரத்த நிறத்திலான திரவத்தை உடல் முழுவதும் ஊற்ற ஆரம்பித்தார்.

இதனால் அங்கு பரபரப்பு நிலவிய நிலையில், காவலாளிகள் உடனடியாக அப்பெண்ணை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

Tags:    

மேலும் செய்திகள்