வைரலான திரிஷா திருமண வதந்தி...!
திரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் திருமண உடையில் இருக்கும் புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வந்தார்.;
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த திரிஷா 'பொன்னியின் செல்வன்' படம் மூலம் மேலும் புகழ்பெற்றார். விஜய் ஜோடியாக 'லியோ' படத்தில் மீண்டும் நடிக்கிறார். விடா முயற்சி படத்தில் அஜித்குமார் ஜோடியாக நடிக்கவும் பேசுகிறார்கள்.
தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகில் 20 ஆண்டுகளாக தனது நடிப்பு பயணத்தை தொடரும் திரிஷா 40 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருக்கிறார். ஏற்கனவே திருமணம் முடிவாகி ரத்தானது.
சமீபத்தில் திரிஷா அளித்த பேட்டியில், "சினேகிதர்கள் சிலர் திருமணம் செய்து கொண்டு சில ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்று பிரிந்தது எனக்கு தெரிய வந்தது. அதனால் வாழ்நாள் முழுவதும் என்னோடு இணைந்து பயணம் செய்பவரை மட்டுமே மணப்பேன்'' என்றார்.
இந்த நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் திருமண உடையில் இருக்கும் தனது புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வந்தார். அதை பார்த்த ரசிகர்கள் திரிஷா திருமணத்துக்கு தயாராகி விட்டார் என்றும், மாப்பிள்ளை பார்த்து விட்டனர் என்றும் பதிவிட்டனர். இது வைரலானது. ஆனால் திருமண தகவல் வதந்தி என்று நெருக்கமானவர்கள் மறுத்துள்ளனர்.