பூஜையுடன் தொடங்கியது "தளபதி 69" படப்பிடிப்பு

நடிகர் விஜய் தனது கடைசிப் படமான "தளபதி 69" பூஜையில் இன்று பங்கேற்றார்.

Update: 2024-10-04 09:33 GMT

சென்னை,

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 5-ம் தேதி வெளியாகி வெற்றி நடைபோட்டு வரும் படம் 'தி கோட்'. இப்படம் விஜய்யின் 68-வது படமாகும். இப்படத்தை தொடர்ந்து, அவர் தனது 69-வது படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'தளபதி 69' என பெயரிடப்பட்டுள்ளது. இதுதான் நடிகர் விஜய்யின் கடைசி படமாகும். 'தளபதி 69' படத்தை எச்.வினோத் இயக்க உள்ளார். மேலும், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த நிறுவனத்தின் முதல் தமிழ் படம் இதுவாகும். இந்த படத்தில் நடிகர் பாபி தியோல், மமிதா பைஜு, பூஜா ஹெக்டே, கவுதம் வாசுதேவ் மேனன், நடிகை பிரியாமணி, நடிகர் நரேன், நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் இணைந்துள்ளதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில், "தளபதி 69" படத்தின் பூஜை இன்று காலை நடைபெற்றது. "தளபதி 69" பட பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இந்த பூஜையில் விஜய், பூஜா ஹெக்டே, இயக்குனர் ஹெச். வினோத், பாபி தியோல், மமிதா பைஜூ உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். நாளை இப்படத்தின் படப்பிடிப்பு பாடல் காட்சியுடன் துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

படத்திற்கான பூஜை இன்று நடைபெற்ற வேளையில் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டுக்கான பந்தக்கால் நடும் விழாவையும் விஜய் நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்