விஜய்யின் 'கோட்' படம் வெளியாகும் தேதி அறிவிப்பு
'கோட்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.;
சென்னை,
லியோ வெற்றியை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் "தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்"(கோட்) என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இந்தப்படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
சமீபத்தில் கோட் படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. கேரள ரசிகர்களின் வரவேற்பு மிக பிரம்மிப்பாக இருந்தது. பின்பு நான்கு நாட்கள் படப்பிடிப்பு முடித்தவுடன் சென்னை திரும்பினார் விஜய்.
தற்போது கோட் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ரஷிய தலைநகரான மாஸ்கோவில் நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்தில் வெங்கட் பிரபு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், 'கோட்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த திரைபடம் உலகம் முழுவதும் வரும் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.