'தி கோட்' படக்குழுவினருடன் படத்தை பார்த்த விஜய் - வைரலாகும் புகைப்படம்

நடிகர் விஜய் 'தி கோட்' படம் சிறப்பாக அமைந்ததற்காக படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.;

Update:2024-09-05 11:49 IST

சென்னை,

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் , 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (தி கோட்) படத்தில் நடித்துள்ளார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் வெளியான படத்தின் டிரெய்லரில் டிஏஜிங் தொழில்நுட்பம் மூலம் விஜய் இளம் வயதில் தோன்றும் காட்சிகள் இருப்பதால் இப்படத்தின் மீது பெரியளவில் எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஜய் நடித்துள்ள 'தி கோட்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் முதல் காட்சி காலை 4 மணிக்கு தொடங்கியது. அதிகாலை முதலே ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கியது. 

இந்த நிலையில், நடிகர் விஜய் 'தி கோட்' படத்தினை குடும்பம் மற்றும் படக்குழுவினருடன் இணைந்து பார்த்துள்ளார். அவருடன் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இணைந்து படத்தினை பார்த்துள்ளனர். பின்னர் விஜய், படம் சிறப்பாக அமைந்ததற்காக இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் யுவன் சங்கர் ராஜாவை வெகுவாக பாராட்டியுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. 

மேலும் திரிஷா, கீர்த்தி சுரேஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் படத்தின் முதல் காட்சியை திரையரங்குகளுக்கு நேரில் சென்று ரசிகர்களுடன் பார்த்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்