'விஜய் மக்களுக்கான தலைவராகிவிட்டார்' - த.வெ.க தலைவருக்கு சூரி வாழ்த்து
நடிகர் கருணாஸ், விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்றிருக்கிறார்.;
சென்னை,
நடிகர் விஜய் தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி இருக்கிறார். சமீபத்தில், கட்சியின் கொடியை விஜய் அறிமுகப்படுத்தினார். இதனைத்தொடர்ந்து, அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், த.வெ.க தலைவர் விஜய்க்கு சூரி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், 'அண்ணனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இன்று மக்களுக்கான தலைவராகிவிட்டார். நாளை அவர் எண்ணம்போல் எதுவாக விரும்புகிறாரோ, அதுவாகவே ஆகி கண்டிப்பாக மக்களுக்கு நல்லது செவ்வார் என்று நம்புகிறேன்', என்றார்.
அதேபோல், நடிகர் கருணாஸ் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்றிருக்கிறார். அவர் கூறுகையில், 'ஜனநாயக ரீதியாக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தோடு அரசியலுக்கு வருகிற யாராக இருந்தாலும் வரவேற்கிறோம். அந்தவகையில், மக்களுக்கு பரிச்சயமான ஒரு நடிகர், மக்கள் பணி செய்ய வருகிறார் என்றால் அதை நான் வரவேற்கிறேன்', என்றார்.