கடவுள் என் முன்னாடி வந்தா... நீங்க என்ன கேப்பிங்க? - விஜய் ஆண்டனி ட்வீட்
சமூக பிரச்சனை குறித்து விஜய் ஆண்டனி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகிறது.
சென்னை:
இசையமைப்பாளராக இருந்து கதாநாயகனாக உயர்ந்துள்ள விஜய் ஆண்டனி வித்தியாசமான கதைகள், கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். ஏற்கனவே அவர் நடிப்பில் வந்த படங்கள் ரசிகர்களை கவர்ந்ததுடன் நல்ல வசூலும் பார்த்துள்ளன. தற்போது கொலை, ரத்தம், வள்ளிமயில், தமிழரசன், அக்னி சிறகுகள் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில் விஜய் ஆண்டனி தனது டுவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து பதிவுகளை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் குடும்ப பிரச்சனை குறித்து பகிர்ந்தார். மேலும் பரங்கிமலையில் நடந்த கொடூர கொலை குறித்து தனது ஆதங்கத்தை பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் கடவுள் என் முன்னாடி வந்து வரம் கேட்டால், சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளை ஒழித்துவிட்டு இங்கேயே இருந்து விடுங்கள் என பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,
"கடவுள் என் முன்னாடி வந்தா, ஜாதி மதம் கோயில் சாமியார் எல்லாரையும் உலகத்துல இருந்து எடுத்துட்டு, வறுமை கொலை கொள்ளைய ஒழிசிட்டு, பேசாம நீங்க எங்க கூடவே இருந்துருங்க சார்ன்னு, ரெக்யூஸ்ட்-ஆ (request) கேப்பேன். நீங்க என்ன கேப்பிங்க?" என ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.