தமிழில் வரும் வருண் தவான் படம்
பிரபல இந்தி நடிகர் வருண் தவான், கீர்த்தி சனோன் நடித்துள்ள `பெடியா' இந்தி படம் தமிழிலும் திரைக்கு வர உள்ளது.;
தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட அனைத்து மொழி களிலும் வெளியாகும் பான் இந்தியா படங்கள் அதிகம் தயாராகின்றன. அந்த வரிசையில் பிரபல இந்தி நடிகர் வருண் தவான், கீர்த்தி சனோன் நடித்துள்ள `பெடியா' இந்தி படம் தமிழிலும் திரைக்கு வர உள்ளது. இதில் தீபக் தோப்ரியால், அபிஷேக் பேனர்ஜி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் டிரெய்லர் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் தற்போது இதில் இடம்பெற்றுள்ள `எனக்காய் பிறந்தவளே நீயா' என்ற தமிழ் காதல் பாடல் வெளியாகி உள்ளது.
சச்சின்-ஜிகர் இசையமைத்துள்ள இந்தப் பாடலை கார்த்தி பாடி உள்ளார். மேலும் காடுன்னா திரில்லுதானடா என்ற பாடலையும் வெளியிட்டு உள்ளனர். மேடாக்ஸ் தயாரிப்பில் ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும் பெடியா படம் 2டி மற்றும் 3டியில் வெளியாக உள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஸ்டுடியோ கிரீன் இந்தப் படத்தை வெளியிடுகிறது.